சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி

சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி
X

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திபட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். டெல்லியில் இருந்து விமானத்தில் கிளம்பிய பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.

டெல்லியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்ட பிரதமர் தற்போது சென்னை வந்துள்ளார். விமான நிலையத்தில் இருந்து அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்திற்கு பிரதமர் செல்கிறார். பின்னர் அங்கிருந்து விழா நடக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு காரில் செல்கிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையையொட்டி சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்