சென்னை மெட்ரோவில் இலவச பயணம்

சென்னை மெட்ரோவில் இலவச பயணம்
X

பிரதமர் மோடி இன்று சென்னை வர உள்ள நிலையில், சென்னையில் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை வரும் பிரதமர் மோடி, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரையிலான மெட்ரோ சேவை, சென்னை கடற்கரை மற்றும் அத்திபட்டு இடையிலான நான்காவது ரயில் பாதையில் ரயில் சேவை உள்ளிட்ட பல திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இந்நிலையில் பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயிலில் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 11 மணிவரை இலவசமாக பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!