சென்னை மெட்ரோ ரயில் நெரிசல் நேரங்களில் கூடுதல் சேவை
X
By - A.Ananth Balaji, News Editor |12 Feb 2021 3:46 PM IST
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கை கருத்தில்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் (peak hours) 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.
எனவே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (peak hours) காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் காலை 5.30 மணி முதல் 8 மணி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu