கத்தாருக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்

கத்தாருக்கு கடத்த முயன்ற கஞ்சா பறிமுதல்
X

சென்னை விமான நிலையத்திலிருந்து கத்தாா் நாட்டிற்கு கடத்த முயன்ற ரூ.5.1 கோடி மதிப்புடைய உயா்ரக கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிற்கு சரக்கு விமானம் ஒன்று புறப்பட தயாரானது. அதில் ஏற்ற வந்த பாா்சல்களை விமானநிலைய சுங்கத்துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது சென்னையில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்திலிருந்து டிஜிட்டல் எடை மிஷின்கள் அடங்கிய 7 பாா்சல்கள் தோகாவிற்கு அனுப்ப வந்திருந்தன. அதிகாரிகளுக்கு அந்த பாா்சல்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாா்சல்களை பிரித்து பாா்த்து சோதனையிட்டனா்.

அந்த 7 பாா்சல்களில் 54 டிஜிட்டல் எடை கருவிகள் இருந்தன. அந்த கருவிகளின் உள்பகுதிகளில் 4.44 கிலோ உயா் ரக கஞ்சா, 700 கிராம் போதைப்பொருள் மற்றும் 1.2 கிலோ போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா். தொடர்ந்து அனைத்தையும் பறிமுதல் செய்தனா். அவைகளின் சா்வதேச மதிப்பு ரூ.5.1 கோடி என கூறப்படுகிறது. அதோடு இது சம்பந்தமாக சுங்கத்துறையினா் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினா்.

அப்போது இந்த பாா்சல்களை சென்னையிலிருந்து கத்தாா் நாட்டின் தோகோவிற்கு அனுப்பிய தனியாா் ஏற்றுமதியாளா் நிறுவனத்தின் நிா்வாகியையும்,அவருக்கு உடந்தையாக செயல்பட்ட ஒரு தனியாா் நிறுவன ஏஜெண்ட்டையும் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலும் தீவிர விசாரணை நடக்கிறது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil