சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரிப்பு

சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரிப்பு
X

சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் விசாரித்தார் என டிடிவி தினகரன் கூறினார்.

பெங்களூருவில் இருந்து சென்னை வந்த சசிகலா, முதலில் ராமாவரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் இல்லத்துக்கு சென்றார். எம்ஜிஆர் இல்லத்தில் உள்ள அவரது உருவப்படத்துக்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிலையில் சசிகலா உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியில் தன்னிடம் விசாரித்தார் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

மேலும், அதிமுகவில் இன்னமும் ஸ்லீப்பர் செல் உள்ளனர். அதிமுக பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியில் இருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உண்டு. ஆர்கேநகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவேன் என்றார்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!