தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்- முதல்வர் துவக்கி வைத்தார்
தமிழகத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
திருமண நிதியுதவித் திட்டத்திற்காக 95,739 பயனாளிகளுக்கு 726 கோடி ரூபாய் நிதியுதவி, தாலி செய்வதற்கு தங்க நாணயங்கள் வழங்குவதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார்.
அது போல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மண்டல புற்றுநோய் மையம் மற்றும் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பல்வேறு மருத்துவக் கட்டடங்களை திறந்து வைத்து, சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்கவியல் புற்றுநோய் பிரிவுக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். மேலும் சிதம்பரம் இளமையாக்கினார் திருக்கோயிலின் திருக்குளத்திற்கு மதிற்சுவர், நாகூர் தர்காகுளத்தின் நான்குபுறத் தடுப்புச் சுவர் புதுப்பித்துக் கட்டப்படும் பணி ஆகியவற்றிற்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu