ஆந்திரா மாநில பஸ்கள் இயக்கப்படுகின்றன

ஆந்திரா மாநில பஸ்கள் இயக்கப்படுகின்றன
X
திருமலையில் சிறப்பு தரிசனம் செய்ய ஆன்லைன் டிக்கெட்டுகளை, பஸ் டிக்கெட்டுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சென்னை, மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திரா மாநில பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் பக்தர்கள், திருமலையில் சிறப்பு தரிசனம் செய்ய விரும்பினால், அதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகளை, பஸ் டிக்கெட்டுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். கொரோனாவால் நிறுத்தப்பட்ட இத்திட்டம், நேற்று முதல் துவங்கியது. தினமும், 1,000 சிறப்பு தரிசன டிக்கெட் கிடைக்கும். ஒரு டிக்கெட், 320 ரூபாய்.பயணியர், apsrtc online.in என்ற இணைய தளம் அல்லது மாதவரம், ஆந்திர மாநில பஸ் நிலைய டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றில், முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Next Story