/* */

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

மத்திய,மாநில அரசுகளை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
X

சென்னையில் இலங்கை அரசைக் கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சமீபத்தில் புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டனர். ஆனால் இந்த விவகாரத்தில் இலங்கை அரசை கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் ராயபுரம் மீன்வளத்துறை துணை இயக்குனர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் இளைய அருணா தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான திமுக நிர்வாகிகள் மற்றும் மீனவ பெண்கள் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர், திரையரங்கு உரிமையாளர் செயலாளர் மூர்த்தி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 1 Feb 2021 7:36 AM GMT

Related News