முன் விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை

முன் விரோதத்தால் வாலிபர் வெட்டிக்கொலை
X

சென்னை, தண்டையார்பேட்டை பகுதியில்,முன் விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

சென்னை, கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ்(25).இவர், பழைய வண்ணாரப்பேட்டை, வேங்கடகிருஷ்ணன் தெருவில், பூ மாலை கட்டி விற்று வந்தார். இவரது சகோதரர் ஜெயக்குமார்(23). சூரியபிரகாசிற்கும்,ரவுடி மணி என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், துக்க நிகழ்ச்சி ஒன்றிக்கு சூரிய பிரகாஷ், ஜெயக்குமார் ஆகியோர் சென்றிருந்தனர். அங்கு சூரிய பிரகாஷ், மணி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, இருவரும், அங்கிருந்து கிளம்பி, தண்டையார்பேட்டை, கோதண்டராமன் தெரு வழியாக வந்தனர்.

அங்கு பாட்டில்மணி அவரின் கூட்டாளிகள் ஐயப்பன் ,கருப்பு சூர்யா, வடிவேல் ,நரேஷ், ஆகியோர் சூரிய பிரகாசுடன் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சூரியபிரகாஷை சரமாரியாக வெட்டினர். தடுக்க வந்த சூரியபிரகாசின் சகோதரர் ஜெயக்குமாருக்கும் வெட்டு விழுந்தது. சம்பவ இடத்திலேயே சூரிய பிரகாஷ் உயிரிழந்தார். இதை பார்த்ததும், பாட்டில் மணி, அவரின் கூட்டாளிகள் தப்பி ஓடி விட்டனர். இது குறித்த தகவல் கிடைத்து, வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த ஜெயக்குமாரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து சூரிய பிரகாசின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். இது தொடர்பாக தண்டையார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future ai robot technology