மாணவர் ஓட்டி வந்த கார் மோதி இருவர் படுகாயம்

மாணவர் ஓட்டி வந்த கார் மோதி இருவர் படுகாயம்
X

சென்னையில் கல்லுாரி மாணவர் ஓட்டி வந்த கார் மோதி ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

சென்னை தாம்பரத்தில் இருந்து கிண்டி நோக்கி அதிவேகமாக சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் ஏர்லைன்ஸ் நிறுவன பணியாளர்கள் விமான நிலையத்திற்கு உள்ளே செல்வதற்காக சாலையை கடக்க முயன்றனர். அப்போது அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர்.இதனால் பணியாளர்கள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த ஆட்டோ ஓட்டுநர்கள், மற்றும் போக்குவரத்து போலீசார் காயமடைந்த இருவரையும் ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காயமடைந்த இருவரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பணியாளர்கள் ஆனந்த், ஜாவித் என்பதும் மேலும் காரில் அதிவேகமாக வந்தவர் குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்த சாய்சரண் (20) என்பதும் இவர் சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் பி.ஏ படித்து வரும் மாணவன் என தெரியவந்தது. மேலும் சாய்சரணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business