விமான நிலைய ஊழியர் திடீர் உயிரிழப்பு

விமான நிலைய ஊழியர் திடீர் உயிரிழப்பு
X

சென்னை விமானநிலையத்தில் பணியிலிருந்த ஏா் இந்தியா ஊழியா் திடீரென மயங்கிவிழுந்து உயிரிழந்தார்.

சென்னை விமானநிலையத்தில் உள்ள ஏா் இந்தியா அலுவலகத்தில் கமா்சியல் பிரிவில் ஊழியராக பணியாற்றி வந்தவர் பசுபதி ராஜன்(57). சம்பவத்தன்று விமானத்தில் வந்த பாா்சல்களை கணக்கெடுக்கும் பணியில் பசுபதிராஜன் ஈடுபட்டிருந்தாா். அப்போது அவா் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து அங்கிருந்த சக ஊழியா்கள் அவரை உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனா்.

அங்கு பசுபதி ராஜனுக்கு திவீர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் அவா் நினைவு திரும்பாமலேயே உயிரிழந்தாா். கடுமையான மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து சென்னை விமானநிலைய போலீசாா் பசுபதி ராஜன் உடலை கைப்பற்றி,குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி,மேலும் விசாரணை நடத்துகின்றனா்.

Tags

Next Story
ai future project