அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு

அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இன்று சந்திப்பு
X

டெல்லியில் இன்று அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமி சந்திக்கிறார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவிற்காக பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையிலிருந்து டெல்லி செல்ல இருக்கிறார். இதனிடையே இன்று இரவு டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவருடைய இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார்.இதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள புதிய தமிழ்நாடு இல்லத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்