ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்

ரஜினி மன்ற நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்
X

ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்த நிலையில்,திடீரென தனது உடல்நிலை காரணமாக அந்த முடிவை கைவிடுவதாக அண்மையில் அறிவித்தார்.இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர்.

ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர், திமுக தலைமையகமான சென்னை - அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!