எம்ஜிஆர் பிறந்தநாள்- அதிமுக கொண்டாட்டம்

எம்ஜிஆர் பிறந்தநாள்- அதிமுக கொண்டாட்டம்
X

எம்ஜிஆரின் 104-வது பிறந்ததினத்தை முன்னிட்டு இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு அதிமக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளான இன்று (ஜன. 17-ம் தேதி) காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதை தொடர்ந்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

எம்ஜிஆரின் பிறந்த தினமான இன்று மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சிப் பகுதி, வட்ட அளவில் கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அனைவரும் ஆங்காங்கே அமைந்துள்ள எம்ஜிஆரின் உருவ சிலைகள், அவரது படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!