தடுப்பூசி போட்டு கொள்வோர்க்கு கட்டுப்பாடுகள் விஜயபாஸ்கர்

தடுப்பூசி போட்டு கொள்வோர்க்கு கட்டுப்பாடுகள்  விஜயபாஸ்கர்
X

கொரொனா தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்கள் மது அருந்தக் கூடாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் 16 ஆம் தேதி 307 மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்ட பிறகு மது அருந்த வேண்டாம். அடுத்த 26 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் அளிக்கப்படும். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் மது அருந்தக் கூடாது. தடுப்பூசி போடுபவர்களை எந்த வகையிலும் தனிமைப்படுத்தக் கூடாது. அதேபோன்று தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story
ai in future agriculture