சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை

சென்னை கடற்கரைகளில் பொதுமக்கள் கூட தடை
X

சென்னையில் கடற்கரை மற்றும் பூங்காக்‍களில் வரும் 15, 16, 17 ஆகிய நாட்களில் பொதுமக்‍கள் கூட அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா, மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும், அளவுக்‍கு அதிகமான பொதுமக்‍கள் கூட்டம் கூடுவார்கள் என்பதால், கொரோனா பரவலைத் தடுக்‍கும் வகையில், வரும் 15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்‍களுக்‍கு அனுமதியில்லை என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!