கடலில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்

கடலில் குளிக்க சென்ற சிறுவன் மாயம்
X

சென்னை காசிமேடு கடற்கரையில் குளிக்கச் சென்ற 15 வயது சிறுவன் ராட்சஸ அலையில் சிக்கி மாயமானார். அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை காசிமேடு ஜிஎம் பேட்டை தெருவில் வசித்து வரும் விரலால்யாதோ மகன் சந்தோஷ் ( 15). இவர் நண்பர்களோடு காசிமேடு கடலில் குளிக்கச் சென்றார். அப்பொழுது பெரிய ராட்சத அலையில் மாட்டிக் கொண்டார். உடனே அருகில் இருந்த மீனவர்கள் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றனர். அலை வேகம் அதிகமாக இருந்ததால் அந்த சிறுவனை மீட்க முடியாமல் கடைசியில் அலையில் அழைத்து செல்லப்பட்டார்.இதனையடுத்து சந்தோஷின் தந்தை காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்பகுதியில் உள்ள மீனவர்கள் உதவியோடு பைபர் படகு மூலமாக சிறுவனை தேடும் பணியில் இறங்கியுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!