சிறுமி பாலியல் வழக்கு, அரசு ஊழியர் கைது

சிறுமி பாலியல் வழக்கு, அரசு ஊழியர் கைது
X

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமி பாலியல்வழக்கில் 22 ஆவது நபராக அரசு ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னை காவல்துறை ஆணையாளர் மகேஷ்குமார் உத்தரவின் பெயரில் அவர்கள் மேலும் ஏதாவது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்களா என்பதை கண்டறிய 6 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. சென்னையை அடுத்த கோவளம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியின் தாய் தனது மகளை சென்னை வியாசர்பாடி சர்மாநகர் பகுதியை சேர்ந்த சாயிதாபானு என்பவரிடம் வீட்டு வேலைக்காக அனுப்பி வைத்தார். சாய்ராபானு என்பவர் முன்னதாக தண்டையார்பேட்டை சஞ்சீவிராயன் கோவில்தெருவைச் சார்ந்த மதன் என்பவரோடு சேர்ந்து விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதமாக சாயிதா பானுக்கு உடல்நிலை சரியில்லாததால் சிறுமியையும் பாலியல்தொழிலில் உட்படுத்துவதற்காக மதன் மற்றும் அவரது அம்மா செல்வி அவரது தங்கை சந்தியா மற்றும் நண்பர்கள் ஒன்று சேர்ந்து சிறுமியை கொடுமைப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார். இதனை அறிந்த சிறுமியின் தாயார் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் தண்டையார்பேட்டை மகளிர் போலீசார் சிறுமியை அழைத்து வந்து விசாரித்ததில் உண்மையை கூறவே மதன் மற்றும் அவரது தாயார் அவரது தங்கை மற்றும் விபச்சார புரோக்கர்கள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்து புழல் மத்திய சிறையில் அடைத்தனர். இதில் இருந்த 6 பேரை காவலில் எடுத்து விசாரித்த போது தான் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சார்ந்த பாஜக பிரமுகர் ராஜேந்திரன், காவல்ஆய்வாளர் புகழேந்தி கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து பத்திரிகை நிருபர், மருத்துவர் உள்ளிட்ட 21 பேர் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வந்தனர். ஏற்கனவே இருபத்தோரு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய அடையாள அணிவகுப்பில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் கட்டுமான பொறியாளராக பணிபுரியும் கண்ணன் என்பவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

Tags

Next Story