வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது

வில்சன் கொலை வழக்கில் தொடர்புடையவர் கைது
X

கன்னியாகுமரியில் போலீஸ் உதவி ஆய்வாளா் வில்சனை கடந்த ஆண்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த தீவிரவாதி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவிலிருந்து சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு சிறப்பு விமானம் இன்று வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போா்ட் மற்றும் ஆவணங்களை குடியுறிமை அதிகாரிகள் பரிசோதித்தனா். அப்போது கேரளா மாநிலத்தை சோ்ந்த சகாபூதீன்(35) என்ற பயணி,கேரளா மாநில போலீசால் தேடப்படும் குற்றவாளி.இவா் மீது திருவனந்தபுரம் போலீசாா் கடந்த ஓராண்டிற்கு முன்பு அனைத்து விமானநிலையங்களுக்கும் LOC கொடுத்து வைத்திருந்தனா்.இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து தனி அறையில் அடைத்து வைத்தனா்.அதோடு அவா் பிடிப்பட்டுள்ள தகவல் கேரள மாநில போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் விசாரணையில் சகாபூதீன் கன்னியாகுமரியால் கடந்த ஆண்டு போலீஸ் உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தலைமறைவானவா் என்பதும் ,அவரை தேசீய புலனாய்வு அமைப்பு தேடி வருவது தெரியவந்தது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகளும் வந்து விசாரணை நடத்துகின்றனா். கேரளா மாநில போலீசாரிடம் சகாபூதீனை ஒப்படைக்கவிருக்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai in future agriculture