கவிஞர் பிறைசூடன் உடல் நலக்குறைவால் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்

கவிஞர் பிறைசூடன் உடல் நலக்குறைவால் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்
X

கவிஞர் பிறைசூடன். 

தமிழ் திரையுலகின் பாடலாசிரியரும் கவிஞருமான பிறைசூடன் இன்று உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

கவிஞர் பிறைசூடன் கடந்த 1985ம் ஆண்டு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனால் திரைத்துறைக்கு பாடலாசிரியராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் பிறந்த கவிஞர் பிறைசூடன், 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் இளையராஜாவோடு பயணித்து பல்வேறு படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார்.

இவர், தமிழக அரசின் சிறந்த பாடலுக்கான விருதை பெற்றுள்ளார். இதுவரை 400 திரைப்படங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களையும், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களையும் எழுதியுள்ளார்.

இந்நிலையில், 65 வயதை கடந்த பிறைசூடன் இன்று மாலை உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். தமிழ் மொழி அறிஞராகவும் இவருடைய பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story