தமிழகத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி
1927ஆம் ஆண்டுமுதல் சர்வதசே செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 43 முறை இத்தொடர் நடைபெற்றுள்ள நிலையில், அதில் ஒரு சீசன் கூட இந்தியாவில் நடைபெற்றது கிடையாது.
இந்நிலையில், முதல்முறையாக 2022ஆம் ஆண்டு சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவில் அதுவும் நமது தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெறவுள்ளது. இத்தொடர் முதலில் ரஷ்யாவில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நிலவும் போல் சூழல் காரணமாக மாற்று இடத்தில் நடத்த ஏலம் நடைபெற்றது. இந்நிலையில், அந்த ஏலத்தில் இந்தியா வெற்றிபெற்றாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்துதான், போட்டிகள் சென்னைக்கு இடமாறியுள்ளது.
இந்த ஏலம் கோருவதற்கான கோரிக்கையுடன் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு, முதல்வர் அலுவலகத்தை அணுகிய ஒருசில மணி நேரத்திலேயே அடைத்து ஒப்புதல்களையும் தமிழக அரசு வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தொடரில் மொத்தம் 200 நாடுகளை சேர்ந்த 2000 போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், இத்தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளதால் இந்தியாவைச் சேர்ந்த பல அணிகள் தமது தாய்நாடு சார்பாக பங்கேற்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது. இத்தொடர் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதிவரை நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுகுறித்து ட்வீட் வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. தமிழ்நாடு பெருமை கொள்ளும் தருணம் இது'' எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 73 கிராண்ட் மாஸ்டர்கர் இருக்கிறார்கள். அதில் பிரக்னானந்தா, விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் அதிபன், ஸ்ரீநாத் போன்றவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu