குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள், ஊக்குவிப்பவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்..
குழந்தைத் திருமணத்தை நடத்தும் அவர்கள் மீதும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கீதாஜீவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் Covid-19 இரண்டாவது அறையின் தாக்கத்தின் காரணமாக குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டும் தீவிரமாக கண்காணிக்கும் பொருட்டு தமிழக முதலமைச்சர் அறிவுரைப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்கள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் சைல்டு லைன் 10 98 அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் காலை 11 30 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் குழந்தை திருமணத்தை தடுக்க சம்பந்தப்பட்ட காவல்துறை வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து சமூக பாதுகாப்புத் துறையும் சமூகநலத்துறை எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
குழந்தை திருமணத்தை நடத்துபவர்கள் அதனை ஊக்குவிப்பவர்கள் மற்றும் இத்தகைய குழந்தை திருமணத்தை கலந்துகொள்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது. கூட்டத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் அரசு முதன்மைச் செயலர் செம்புக்கு சமூக நல ஆணையர் ஆபிரகாம் சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் யார் வேணா ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் கவிதா ராமு மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu