/* */

254 உதவிப் பேராசிரியர்களின் பணி நியமனம் செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி…

சென்னை பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் பணி நியமனம் செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

254 உதவிப் பேராசிரியர்களின் பணி நியமனம் செல்லாது.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி…
X

சென்னை உயர் நீதிமன்றம். (கோப்பு படம்).

தமிழகம் முழுவதும் உள்ள சில அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் உதவிப் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. தமிழகம் முழுவதும் இதுதொடர்பாக நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், சென்னை பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர் பணி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு பணி இடம் நிரப்பப்பட்டது.

இதையெடுத்து. அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. அதன் பிறகு 254 பேரும் பணியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினர். இருப்பினும், அந்த பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதற்கிடையே, புதிதாக நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களில் 152 பேர் உரிய தகுதியை பெறவில்லை என்றும், விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காமல் பேராசிரியர் பணி இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக,சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதற்கிடையே, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வு பெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களின் கல்வித் தகுதி தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது பல்வேறு விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, அவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து, கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் மூலம் 254 உதவி பேராசிரியர்களின் கல்வித் தகுதி ஆய்வு செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆசிரியர் பணி அனுபவத்திற்கு வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சுப்பிரமணியம், முறையாக தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது என இன்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தார்.

மேலும், உதவிப் பேராசிரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை என்றும் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும் நீதிபதி சுப்பிரமணியம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டி உள்ளார். நீதிபதி சுப்பிரமணியத்தின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 18 Nov 2022 4:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  2. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  4. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  5. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  6. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  8. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  9. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  10. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...