விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
X
Chennai Airport News - சென்னையில் இருந்து துபாய் செல்ல இருந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்

Chennai Airport News -சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.45 மணியளவில் துபாய்க்கு இண்டிகோ ஏர்லைன் விமானம் செல்ல இருந்தது. அப்பொழுது, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து, விரைந்து செயல்பட்ட போலீசார், விமான நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விமானத்தை சோதனையிட்ட அதே நேரம், அழைப்பு வந்த செல்போனை எண்ணை வைத்து மிரட்டல் விடுத்தவரை போலீசார் கண்டறிந்தனர்.

விசாரணையில் அந்த நபர் ரஞ்சித்குமார் என்பதும், சகோதரியின் துபாய் பயணத்தை தடுக்க வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.

வெடிகுண்டு புரளியால், விமானம் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது .

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!