கங்கைகொண்ட சோழபுரம் கோவில் புனரமைப்பு தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்பு படம்)
நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறைகளின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரத்தில், முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
யுனெஸ்கோ அமைப்பால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த கோவிலில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரி, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் தாலுகா, டி.மாங்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், இந்திய தொல்லியல் துறை சார்பில் கோவிலில் மூன்று கோடி ரூபாய் செலவில் புத்தக நிலையம், உணவகம், கழிப்பறைகள் என அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதாகவும், பாதுகாக்கப்பட்ட கோவிலில் புதிய கட்டுமானங்களை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும் எனவும், அனுமதியின்றி கட்டுமானங்கள் மேற்கொள்வது குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, நாட்டில் உள்ள அனைத்து புராதன சின்னங்களின் பாதுகாவலர்கள் என்ற முறையில், புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய தொல்லியல் துறை, மாநில தொல்லியல் துறைகளின் கடமை எனவும், புராதன சின்னங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்த செயல்களையும் அவர்கள் மேற்கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu