பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

பன்னீர்செல்வத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி
X

ஓ பன்னீர்செல்வம்

2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது போடி நாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் வெற்றிப்பெற்றார்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனுவில் ஓ.பன்னீர்செல்வம் சொத்து விவரங்களை மறைத்ததாகவும், இந்த வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் எனவும் குறிப்பிட்டு மிலானி என்ற வாக்காளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான இந்த வழக்கை இன்று (மார்ச் 17) சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!