ஓட்டு போட்டால் 5% தள்ளுபடி: செங்கல்பட்டு ஆட்சியர் அறிவிப்பு
கோப்புப்படம்
வாக்காளர்கள் ஓட்டுப்போட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்இல் 20ம் தேதி காண்பித்தால், சாப்பிடும் உணவுக்கு 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்த தேர்தல் ஆணையமும், அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர்களும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஏப்.,19ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை ஊக்கப்படுத்த, ஓட்டளித்துவிட்டு வருபவர்கள் உணவகங்களில் சாப்பிடும்போது 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்ட அறிவிப்பில், 'மக்களவை தேர்தலில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் ஏப்இல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு சென்று 100 சதவீதம் ஓட்டு போட வேண்டும். வாக்காளர்கள் ஓட்டு போட்டுவிட்டு விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிட செல்லும்போது காண்பித்தால் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்' என தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பிற்கு மாவட்ட உணவக உரிமையாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu