வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பார்வையாளர்கள்

வண்டலூர் பூங்காவில் ஒரே நாளில் 13 ஆயிரம் பார்வையாளர்கள்
X

வண்டலூர் உயிரியல் பூங்கா - கோப்புப்படம் 

வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாள் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் கடந்த இரண்டு நாட்களாக பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வண்டலூர் பூங்காவில் குவிந்து இருந்தனர். இதனால் பூங்கா முழுவதும் கூட்டம் களை கட்டியது. வார இறுதி விடுமுறை நாளான கடந்த 2 நாட்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது.

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விடுமுறையின் போது டிசம்பர் 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் 21 ஆயிரம் பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாளான இன்று பார்வையாளர்கள் வருகை அதிகம் இருந்தது.

இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும் போது, வண்டலூர் பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை கடந்த ஆண்டின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இதேபோல் புத்தாண்டு வார இறுதியிலும் அதிகமானோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது என்றார்.

Tags

Next Story
போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: ஈரோட்டில் 170 பேர் கைது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்