செங்கல்பட்டு 9வது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு மும்முனை போட்டி

செங்கல்பட்டு   9வது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு மும்முனை போட்டி
X

திமுக வேட்பாளர் செம்பருத்தி

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு மாவட்ட கவுன்சிலருக்கு திமுக, அதிமுக, தேமுதிக இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு மாவட்ட ஊராட்சி கவுன்சிலருக்கு திமுக சார்பில் செம்பருத்தி, அதிமுக சார்பில் சுஜாதா, தேமுதிக சார்பில் மாலா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த பகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக, அதிமுக வேட்பாளர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு இணையாக தேமுதிகவும் களத்தில் பிரசாரம் செய்து வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்