தாமஸ் மலை ஒன்றியம் 10 வது வார்டில் 5 முனைப் போட்டி

தாமஸ் மலை ஒன்றியம் 10 வது வார்டில் 5 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வாசுகி

செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 5 முனைப் போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் வாசுகி, திமுக சார்பில் ரோஜா , , நாம் தமிழர் கட்சி சார்பில் கவிதா , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வைலட் மேரி, , சுயேட்சை வேட்பாளராக அபிதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தாமஸ் மலை 10 வது வார்டில், திமுக, அதிமுக, நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!