திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் கைது

திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞர் கைது
X

பைல் படம்

திருப்போரூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டை சேர்ந்த 16 வயது சிறுமி திருப்போரூர் அடுத்த வெங்கலேரி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்,

வீட்டின் பின்புரம் உள்ள பகுதியில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்ததை நோட்டமிட்ட அதே பகுதியைச் சேர்ந்த அருன்பாண்டியன் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது, அப்போது அச்சிறுமி கூச்சலிட்டதும் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பிதுள்ளான்,

இதனைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர்கள் திருப்போரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திருப்போரூர் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து,

செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்,

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!