திருப்போரூர் அருகே இளம் பெண் கொலை:போலீசார் விசாரணை
திருப்போரூர் அருகே காயார் வனப்பகுதியில் சந்திரா (35) என்ற இளம் பெண் சென்னை தனியார் ஜவுளி விற்பனை நிலையத்தில் பணி புரிந்தார். அவர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதிதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுதத காயார் வனப்பகுதியில் இளம்பெண் தலையில் பலத்த காயங்களுடன் உயிர் இழந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் சந்திரா(35) வேளச்சேரியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. அவர் ஒரு பிரபல துணி கடையில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த அடையாளத்தை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவரது கணவர் மணி வயது( 40 ) என்பதும் தெரிய வந்துள்ளது. உடலை பரிசோதித்ததில் அவரை யாரோ கல்லால் அடித்து கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.
சந்திரா அணிந்திருந்த தங்க ஆபரணங்கள் அவர் கழுத்தில் அப்படியே இருந்தது. அதனால், அவர் கொலைக்கு காரம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu