விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா

விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா
X

பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், எ.வி.ஐ.டி சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பையனூரில் உள்ள விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உலக பெண்கள் தினம் இன்று மாலை கொண்டாடப்பட்டது. விழா, நிறுவன வேந்தர் அ, ச கணேசன், இயக்குனர் அனுராதா கணேசன் ஆகியோர் தலைமை வகித்த நிகழ்ச்சியில், கல்லூரி டீன் (சி எஸ் ஆர்) டாக்டர் கிரி ரங்கசாமி வரவேற்புரை வழங்கினார்,

சிறப்பாளர்களாக டாக்டர் விமலா ராமலிங்கம், (ஐஆர்சிஎஸ், புதுடெல்லி) மற்றும் சாந்தா பிள்ளை, 2022 ஆம் ஆண்டிற்கான விஎம்ஆர்எப்- ன் சிறந்த பெண்மணிக்கான விருதை, கலைமாமணி கோபிகா வர்மா, சோனா பிரகாஷ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விஎம்ஆர்எப்- ன் சிறந்த தலைமைக்கான விருதை டாக்டர் வித்யாவதி, டாக்டர் பூங்கோதை ஆகியோர் பெற்று கொண்டனர். 2022 ஆம் ஆண்டிற்கான தாய்மார்களுக்கான விருதும், எவிஐடி பெண் சாதனை விருதும், அதிக மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவர்களுக்கான விருதும் வழங்கி கௌரவித்தனர்.நிகழ்ச்சி முடிவில் ஒருங்கிணைப்பாளர் (wec) சங்கீதா நன்றி கூறினார்.

Tags

Next Story
ai solutions for small business