முன்னாள் எம்.எல்.ஏ. வின் 75வது பிறந்த நாள் விழாவை கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள்

முன்னாள் எம்.எல்.ஏ. வின் 75வது பிறந்த நாள் விழாவை  கேக் வெட்டி கொண்டாடிய பெண்கள்
X

முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ் மணிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த பெண்கள்

திருப்போரூரில் முன்னாள எம்.எல்.ஏ.வின் 75-வது பிறந்த நாள் விழாவை பெண்கள் கேக் வெட்டிகொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வும் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளருமான வி.தமிழ்மணியின் 75வது பிறந்தநாள் விழாவையொட்டி அவருக்கு தி.மு.க. நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து திருப்போரூர் பஸ் நிலையம் அருகே உள்ள சுப்பையா சுவாமிகள் மடத்தில் ஏழை எளிய ஆதரவற்ற மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பேரூர் கழக செயலாளர் யுவராஜ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து தமிழ்மணியின் வீட்டிற்கு வந்த பெண்கள் கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.கொண்டாடினர். இது குறித்து அப்பெண்கள் கூறியபோது தமிழ்மணி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, எங்களது பகுதிக்கு நிரந்தர குடிநீர் வசதி செய்து கொடுத்தார். அதுமட்டுமல்லாது,100 ஏழை மாணவிகளை தத்தெடுத்து உயர்கல்வி வரையில் படிக்கவைத்தார். அந்த பெண்கள் நாங்கள்தான், அதனால் தற்போது நாங்கள் அவரது பிறந்தநாள் விழாவை கொண்டாடினோம் என்றனர்.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி