நரிக்குறவ இன மக்களுக்கு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் உதவிக்கரம்

நரிக்குறவ இன மக்களுக்கு மண்ணின் மைந்தர்கள் கழகத்தினர் உதவிக்கரம்
X

மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில் மானாமதி அலுவலகத்தில்,  ஊனமுற்றோர் நரிக்குறவர்களுக்கு,  செங்கல்பட்டு பார் கவுன்சில் தலைவர் சி.சொக்கலிங்கம் அரிசி வழங்கினார்.

மானாமதி ஊராட்சியில், மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில், நரிக்குறவர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதி ஊராட்சியில், மண்ணின் மைந்தர்கள் கழகம் தமிழ்நாடு நிறுவனர் செல்வராஜ் ஏற்பாட்டில், இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நரிக்குறவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 5 கிலோ அரிசி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், செங்கல்பட்டு பார் கவுன்சில் தலைவர் சி.சொக்கலிங்கம் கலந்து கொண்டு, உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில், மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு பதவி பொறுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், 200க்கும் மேற்ப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Next Story
நோயாளியைப்  பாக்கப்  போறிங்களா..? கட்டாயம் இதெல்லாம்  தெரிஞ்சிட்டு போங்க...!