திருப்போரூர் ஒன்றியம் 16 வது வார்டில் 6 முனைப் போட்டி

திருப்போரூர் ஒன்றியம் 16 வது வார்டில் 6 முனைப் போட்டி
X

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வேம்பரசி.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 16 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 6 முனைப்போட்டி நிலவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 16வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் கவிதா, திமுக சார்பில் வேம்பரசி, நாம் தமிழர் கட்சி ஸ்ரீதேவி, பாட்டாளி மக்கள் கட்சி விமலா, சுயேட்சை வேட்பாளராக மீனா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திருப்போரூர் 16வது வார்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!