திருப்போரூர் ஒன்றியம் 15 வது வார்டில் 6 முனைப் போட்டி

ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோஸ்பின் விஜி.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 6ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதில் 15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் ரூபாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜோஸ்பின் விஜி, , நாம் தமிழர் கட்சி நந்தினி, பாட்டாளி மக்கள் கட்சி சித்ரா தட்சிணாமூர்த்தி, சுயேட்சை வேட்பாளர்களாக கிருபாவதி, தனலெட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
திருப்போரூர் 15வது வார்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பாஜ.க, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவை நேரடியாக மோதிக் கொள்கிறது. இதனால் இந்த ஒன்றிய கவுன்சில் பகுதியில் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu