திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்

திருப்போரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு நிவாரண பொருட்கள்
X

திருப்போரூர் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ நிவாரண பொருட்களை வழங்கினார்.

திருப்போரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் அமைப்பு சார்பில் நிவாரண பொருட்களை ல் எம்.எல்.ஏ பாலாஜி வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் கேரிடாஸ் இந்தியா என்னும் அமைப்பு ஏற்பாட்டில் திருப்போரூர் பகுதியை சுற்றியுள்ள மாற்று திறனாளிகள் 100 பேருக்கு, அவர்களது வாழ்வாதாரம் காக்கும் வகையில் நிவாரண பொருட்களான அரிசி , எண்ணெய், பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் கேரிடாஸ் இந்தியா அமைப்பு இயக்குநர் அந்தோணிராஜ், விசிக மாநிலச் செயலாளர் சிறுத்தை வீ.கிட்டு, திருப்போரூர் ஒன்றிய செயலாளர் செல்வகுமார், திருப்போரூர் பேரூராட்சி செயலாளர் தேவராஜ், அமைப்பின் நிர்வாகிகள் ஸ்டெல்லா, சக்கரபாணி, பரத் மற்றும் திமுக விசிக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!