திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்
X

மழையில் நனைந்து சேதம் அடைந்த நெல் மூட்டைகள்.

திருப்போரூர்: நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்

செங்கல்பட்டு அடுத்த சிறுங்குன்றம் கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.

செங்கல்பட்டு மாவட்டம், சிறுங்குன்றம், அனுமந்தபுரம், கொண்டமங்களம், மேட்டுப்பாளையம், தர்காஸ், மருதேரி, வெங்கூர், உள்ளிட்ட 15 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த நெல் மூட்டைகளை எடுத்துவந்து விற்பனை செய்கின்றனா்.


இங்கு கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பான முறையில் வைக்காமல் திறந்தவெளியில் ஒருமாத காலமாக வைத்திருப்பதாக விவசாயிகள் புகார் கூறிவந்தனா். இந்த நிலையில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழையின் காரணமாக ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து முளைத்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியது:

நெல் விற்பனை செய்த விவசாயிகளுக்கும் உரிய பணம் வழங்கப்படவில்லை. மழையில் நனையாதவாறு பாதுகாத்து விணாவதைத் தடுக்க வேண்டும். மூட்டைகளுக்கு உடனடியாகப் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்றனா்.

Tags

Next Story
மஹிந்திராவின் புதிய கார் இந்தியாவுக்கு வந்துருச்சு , மஹிந்திரா XEV 9e எலெக்ட்ரிக் கூபே எஸ்யூவி