திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!

திருப்போரூர்: சினிமா பாணியில் ரூ.6 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள்!
X

கொள்ளை நடைபெற்ற வீடு.

திருப்போரூரில் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த மர்ம நபர்கள், மோப்ப நாய் கண்டுபிடிக்காதபடி சினிமா பாணியில் மிளகாய் பொடிகளை தூவிச்சென்ற சம்பவம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி ஊராட்சி, பஞ்சம்திருத்தி கிராமம், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் அதே பகுதியில் கட்டிட காண்ட்ராக்டராக உள்ளார். அருகிலுள்ள மானாமதி பகுதிக்கு துக்க நிகழ்ச்சிக்காக தேவேந்திரனும் அவரது மனைவியும் சென்றுள்ளனர்.

வயதான தாயார் மட்டும் வீட்டின் பின்பகுதியில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் பீரோவை திறந்து அதன் உள்ளே இருந்த ரூ.6 லட்சம் பணம், வெள்ளி பொருட்களை திருடிக்கொண்டு தப்பி சென்றுவிட்டனர்.

இன்று அதிகாலை வீட்டிற்கு வந்த தேவேந்திரன், பீரோ திறக்கப்பட்டு, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மானாமதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

திருடர்கள் வீட்டில் திருடிவிட்டு மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக சினிமா பாணியில் வீட்டிற்குள் இருந்த மிளகாய்பொடியை எடுத்து பரவலாக பல பகுதிகளில் தூவி விட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!