திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு: அமைச்சர் திறப்பு!

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைகளுடன் கொரோனா வார்டு: அமைச்சர் திறப்பு!
X

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 படுக்கைவசதிகளுடன் கொரோனா வார்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு மருத்துவமனையில் 30 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட கொரோனா வார்டை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து வேளாண் துறை சார்பாக சுமார் 500 விவசாயிகளின் நிலங்களில் உள்ள மணல்களை எடுத்து மகசூல் பெறுவதற்கான சோதனை செய்து காட்டினர் .

எந்தவித பூச்சிக்கொல்லி மருந்தும் பயன்படுத்தாமல் இயற்கை உரம் பயன்படுத்தி விவசாயம் செய்து அறுவடை செய்யப்பட்ட நெல் தானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பார்வையிட்டு மேலும் சுற்றியுள்ள கிராமங்களில் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என வேளாண் துறை அதிகாரியை கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன், செங்கல்பட்டு திருப்போரூர் ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!