திருப்போரூர்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ரத்ததான முகாம்

திருப்போரூர்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
X

அதிமுக சார்பில் தண்டலம் கிராமத்தில் அதிமுக சார்பில் நடந்த ரத்ததான முகாம்.

திருப்போரூரில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தண்டலம் கிராமத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு திருப்போரூர் அதிமுக தெற்கு ஒன்றிய இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் ஆனந்தன் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், திருப்போரூர் ஒன்றிய செயலாளர்கள் தையூர் என.குமரவேல் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி முகாமை துவக்கி வைத்தனர்.பின்னர் ஆசிரியர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் மரியாதை செலுத்தினர்.

மேலும் கொரோனா பேரிடரால் தமிழகம் முழுவதும் கடும் ரத்தப் பற்றாக்குறை,கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அறுவை சிகிச்சை நோயாளிகள் ரத்தம் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

எனவே இந்த நெருக்கடியில் இருந்து மனித நேயம் காக்க ரத்ததானம் முகாம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ரத்ததான முகாமில் ஏராளமான கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து ரத்ததானம் செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!