திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் விநியோகம்!

திருக்கழுகுன்றத்தில் பொதுமக்களுக்கு முக கவசம், கபசுர குடிநீர் விநியோகம்!
X

ராஜீவ் காந்தி நினைவு நாளை முன்னிட்டு திருக்கழுகுன்றத்தில் கபசுர குடிநீர், முக கவசம் வழங்கிய போது.

ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று திருக்கழுகுன்றம் பொது மக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதிகளில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக நெய்க்குப்பி ஊராட்சி அனுப்புரம் பகுதியில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு நாளான இன்று பொது மக்களுக்கு முக கவசம், மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் ஆர் எஸ் செந்தில்குமார் ஆலோசனையின் பேரில் திருக்கழுக்குன்றம் கிழக்கு வட்டார தலைவர் நெய்க்குப்பி எம் ஏழுமலை தலைமையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்கள், காவல் துறையினர், உள்ளிட்ட அனைவருக்கும் முக கவசம் மற்றும் கபசுர குடிநீரை வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் பட்டிக்காடு பாபு, நிர்வாகி சிவகுமார், சமூக ஆர்வலர்கள் சதீஷ் கமலக்கண்ணன், செந்தில், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!