திருக்கழுக்குன்றம் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

திருக்கழுக்குன்றம் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
X

திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில்  கும்பாபிஷேகம் நடந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோயில்.

திருக்கழுக்குன்றம் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம் கிராமத்தில் இருநூறாண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கங்கையம்மன்,குத்தாலம்மன் உள்ளிட்ட ஆலயங்களில் இன்றைய தினம் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், கலச பூஜைகள், கோ பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை மங்கள வாத்தியம் முழங்க பாபு ஐயர், வெங்கட்ராமன் ஐயர் ஆகியோரின் வேத மந்திரங்கள் முழங்க தர்மகர்த்தா நடராஜர், நாட்டாமை பெருமாள் முன்னிலையில் யாக சாலையிலிருந்து கலச நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவில் விமானம் மற்றும் கர்ப்பகிரக சுவாமிக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் பொது மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.அங்கு கூடியிருந்த திரளான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!