திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி: திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல்
X

வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்த திமுக வேட்பாளர்கள்.

திருக்கழுக்குன்றம் பேரூராட்சிகான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் கலையரசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். நகர்ப்புற தேர்தல் வருகின்ற 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்தனர். அதனடிப்படையில் காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மணி முன்னிலையில் திமுக வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினர். அதில் திமுக பேரூர் செயலர் யுவராஜ், முன்னாள் கவுன்சிலர் சத்தியமூர்த்தி உட்பட 7 ஆண்கள், 7 பெண்கள் என 14 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் மாவட்ட ஒன்றிய பேரூர், கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!