திருக்கழுக்குன்றம்- கருணாநிதி பிறந்த நாள்: பொது மக்களுக்கு அன்னதானம்!

திருக்கழுக்குன்றம்- கருணாநிதி பிறந்த நாள்: பொது மக்களுக்கு அன்னதானம்!
X

கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றத்தில்  பொது மக்களுக்கு செல்வம் எம்.பி. உணவு பொட்டலங்களை வழங்கினார்.

திருக்கழுக்குன்றத்தில் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு உணவு பொட்டலங்களை செல்வம் எம்.பி. வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள் அன்னதான மண்டபத்தில் முன்னாள் முதல்வரும், மறைந்த திமுக தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திமுக காஞ்சி வடக்கு மாவட்ட திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய செயலாளர் வீ தமிழ்மணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் கலந்து கொண்டு இனிப்புடன் கூடிய உணவு பொட்டலங்களை பொது மக்களுக்கு வழங்கினார்.

இதில் திருக்கழுக்குன்றம் பேரூர் செயலர் யுவராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜாகிர் உசேன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார் முன்னாள் கவுன்சிலர் டி, சத்தியமூர்த்தி, ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம் கே ஹரிதினேஷ், உள்ளிட்டோருடன் முக்கிய நிர்வாகிகள் செங்குட்டுவன், சரவணன், உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்