திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்

திருப்போரூர் கந்தசாமி கோவில் விளைநிலங்கள் குத்தகைக்கு ஏலம்
X

திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள் குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான விளை நிலங்கள், மொத்தம் 129 ஏக்கர் மூன்று கட்டங்களாக, குத்தகைக்கு ஏலம் விடுவதாக கோவில் நிர்வாகம் முடிவு செய்த நிலையில், அதன் முதற்கட்டமாக இன்று திருப்போரூர் பேரூராட்சிக்குட்பட்ட 75.85 ஏக்கர் விளை நிலங்கள் மூன்று வருடத்திற்கான குத்தகை ஏலம் விடப்பட்டது.

இதில், குறைந்தபட்ச தொகையாக, ஏக்கருக்கு 1,000 முதல் ஏலம் கேட்பவரை பொருத்து வசூல் செய்யப்படுகிறது கடந்த 14 ஆண்டுகளாக கோவிலுக்கு வருமானம் இல்லாத சூழலில், தற்போது குத்தகை ஏலம் விடுவது கோவிலுக்கு வருமானத்தை பெருக்கும் என எதிர்பார்ப்பதாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
how to bring ai in agriculture