ஆபரேசன் கஞ்சா 2.O நடவடிக்கையின் கீழ் 45 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ஆபரேசன் கஞ்சா 2.O  நடவடிக்கையின் கீழ்   45 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
X
ஆபரேசன் கஞ்சா 2.O மூலம் தாழம்பூர் காவல் நிலைய போலீசார் 45 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

ஆபரேசன் கஞ்சா 2.O, திட்டத்தின் கீழ் தாழம்பூர் காவல் நிலைய போலீசார் 45 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை, தாழம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் வேலு தலைமையிலான போலீசார் நாவலூர் சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக அதிவேகமாக இருசக்கர வாகனங்களில் வந்தவர்களை மடக்கி விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்ததில் அவர்களிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் நான்கு பேரையும் தாழம்பூர் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் பெருங்குடி கல்லுக்குட்டை கே.பிகே.நகரை சேர்ந்த( 26,) வயதான வெங்கடேசன், துரைப்பாக்கம் பர்மா பஜாரை சேர்ந்த புண்ணியமூர்த்தி( 39,), செங்கல்பட்டு மாவட்டம் கண்டிகையை சேர்ந்த சிரில்( 21,), பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த அஜித் ( 21,) என்பதும் அவர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதும், வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக ஊசி மூலம் உடலில் செலுத்தி போதையில் இருந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து வலி நிவாரணி மாத்திரைகளை கூரியர் மூலம் சென்னை பெருங்குடியில் உள்ள வெங்கடேசன் வீட்டிற்கு வரவைத்து சென்னையில் கல்லூரி மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதித்து வருகின்றனர்.அதேபோல் ஆந்திர மாநிலம் துணி வில்லேஜ் என்ற பகுதிக்கு சென்னையிலிருந்து பிடிப்பட்ட நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் சென்று போர்வை வியாபாரம் செய்ய எடுத்து வருவது போல துணிகளின் இடையே கஞ்சாவை சென்னைக்கு கடத்தி வந்து இங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததுள்ளனர்.

அவர்களிடம் இருந்து 45 கிலோ கஞ்சா, 10 சவரன் தங்க நகை, 1400 மாத்திரைகள், சிரஞ்சு 100, மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.இது குறித்து ஆய்வாளர் வேலு கூறுகையில் டிஜிபி அவர்களின் ஆபரேசன் கஞ்சா 2.O, திட்டத்தின் கீழ் நடத்திய வேட்டையில் கஞ்சா விற்பனையாளர்களை பிடித்ததாக கூறினார்.

Tags

Next Story