திருக்கழுக்குன்றம்,திருப்போரூர் ஒன்றிய வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு

திருக்கழுக்குன்றம்,திருப்போரூர் ஒன்றிய வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கீடு
X

திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்த வேட்பாளர்களுக்கு, அலுவலர் முன்னிலையில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில், திருக்கழுக்குன்றம் திருப்போரூர் ஒன்றியத்தில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்குறிச்சி, நெல்லை, விழுப்புரம் மற்றும் வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 6-ந் தேதி, 9-ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல், கடந்த 15-ந் தேதி தொடங்கி, 22-ம் தேதி மாலை முடிவடைந்தது. தொடர்ந்து, திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியம் மற்றும் திருப்போரூர் ஒன்றியத்தில் திமுக அதிமுக மற்றும் மாற்று கட்சியினர் மொத்தம் 945 பதவிகளுக்கு, 3699 வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களில் வேட்பு மனுவை வாபஸ் பெற்றவர்கள் தவிர, மீதமுள்ள வேட்பாளர்களுக்கு, தேர்தல் அலுவலர் முன்னிலையில் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களுக்கான தேர்தல் சின்னங்களை பெற்றுக்கொண்டு வேட்பாளர்கள், மகிழ்ச்சியுடன் தேர்தல் பணிக்கு புறப்பட்டுச் சென்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!