திருக்கழுக்குன்றம் மலைக்கோவில் படியில் இடறி விழுந்து மாணவன் உயிரிழப்பு

திருக்கழுக்குன்றம் மலைக்கோவில் படியில் இடறி விழுந்து மாணவன் உயிரிழப்பு
X

மலைக்கோவிலில் படியில் இடறி விழுந்து உயிரிழந்த மாணவர் மணிகண்டன்

திருக்கழுக்குன்றம் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற மாணவன் படியில் கால் இடறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கேட்டரிங் வேலை செய்ய வந்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அடுத்த பெருநகர் சேத்துப்பட்டை சேர்ந்த விநாயகம் என்பவருடைய மகன் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் மணிகண்டன். இவர் பகுதிநேர வேலையாக கேட்டரிங் வேலை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கேட்டரிங் வேலை செய்ய வந்தபோது பணியை முடித்து விட்டு, அருகிலுள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய நண்பர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது மலைக்கோவிலில் படியில் இடறி விழுந்து தலையில் அடிபட்டு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உடலைக் கைப்பற்றி திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்